மத்திய மோடி அரசு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவு கூட்டத்தொடரில் தமிழகத்திற்கு எந்த ஒரு நிதியையும் ஒதுக்கப்படாத கண்டித்தும் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை உத்தரவு பேரில் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம்.நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் நாகர்கோவில் தலமை தபால் நிலையம் முன்பு, இரண்டு ஆட்டுக்குட்டிகளுடன் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்.

இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், கிழக்கு மாவட்ட ஐஎன்டியூசி தலைவர் டாக்டர் சிவகுமார், கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி வதனாநிஷா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், துணை அமைப்பு நிர்வாகிகள் உட்பட 100 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
