கன்னியாகுமரி விவேகானந்தாபுரம் பகுதியில், பகவதியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வணிக வளாகம் கட்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டிய நிகழ்வை தொடர்ந்து. சம்பந்தப்பட்ட இடத்தில் குத்துவிளக்கு ஏற்றி அடிக்கல் இடும் பணியை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர்கள் துளசிதரன் நாயர், ராஜேஷ்,சுந்தரி, ஆகியோர் பங்கேற்று செங்கலை எடுத்துக் கொடுக்கும் நிகழ்வில். கன்னியாகுமரி சட்டமன்ற அ.தி.மு.க., உறுப்பினர் தளவாய் சுந்தரமும் பங்கேற்றது பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.!

கன்னியாகுமரியில் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 20 கடைகளுடன் கூடிய அதி நவீன வளாகம் ரூ.2_கோடி செலவில் கட்டப்பட்ட உள்ளது.
இந்த நிகழ்வில், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், பகவதி அம்மன் கோயில் மேலாளர் ஆனந்த், பேரூராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர் தாமஸ். திமுகவை சேர்ந்த தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, திமுக வர்த்தக அணி இணை செயலாளர் தாமரை பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

அடிக்கல் நிகழ்வு நடந்த இடத்திற்கு வெளியே நடந்த ஒரு நிகழ்வு. சிதம்பரம் ரகசியம் போல், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் கடந்த காலத்தில் மூன்று முறை அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்த அருள் ராஜ்.அ தி மு கவில் இருந்து விலகி நாகர்கோவிலில் மாநகராட்சி மேயர் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் முன்னிலையில் தி மு க வில் இணைந்தார். மேயர் உட்பட இன்றைய தி மு க. காங்கிரஸ் உறுப்பினர்கள்.அதிமுகாவில் இருந்து விலகி தி மு க வில் இணைந்த அருள்ராஜ்க்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

