• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

கோவைக்கு வந்த ஆம்னி பேருந்து திடீர் தீ விபத்து

BySeenu

Jul 22, 2024

கோவைக்கு வந்த ஆம்னி பேருந்து திடீர் தீ விபத்து ஏற்பட்டு, குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து முழுவதும் எரிந்து சாம்பல்யின ,அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

திருவண்ணாமலை இருந்து 30 பயணிகளுடன் கோவை நோக்கி ஆகாஷ் டிராவல்ஸ் என்ற குளிர்சாதன வசதி கொண்ட தனியார் பேருந்து இன்று அதிகாலை 6.00 மணி அளவில் கோவை சித்திரா அருகே வந்து கொண்டு இருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டுனர் தாஸ் என்பவர் ஓட்டி வந்தார். அப்பொழுது திடீரென புகை வருவதை கண்ட ஓட்டுநர் தாஸ் உடனடியாக சாலை ஓரமாக பேருந்து நிறுத்தினார். அதில் இருந்த பயணிகளை உடனடியாக கீழே இறங்குமாறு கூறினார்.

உறங்கிக் கொண்டு இருந்த பயணிகள் பேருந்தில் தீ பற்றி எரிவதை பார்த்து கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பேருந்து விட்டு இறங்கினர். உடனடியாக பேருந்தில் இருந்த 30 பயணிகள் பத்திரமாக கீழே இறங்கின உயிர் தப்பினர். பின்னர் இது குறித்து பீளமேடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது. இது குறித்து பீளமேடு காவல் துறையினர் டீசல் கசிவு அல்லது குளிர்சாதன பெட்டியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதா என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.