இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் பெருஞ்சுவர் ரூ.1 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு பணிகள் எல்லாம் முழுமையாக நிறைவடைந்துள்ளது.(ஜூலை _23)ம் தேதி மாலை விவேகானந்த கேந்திர வளாகத்தில் திறக்க இருக்கும் நிகழ்வில் பங்கேற்பதுடன், விவேகானந்த கேந்திர நிர்வாகிகளுடன் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்திலும் மோகன் பகவத் பங்கேற்கிறார் இந்த நிகழ்வுகளில் பங்கேற்க மோகன் பகவத் நாளை(ஜூலை_22)ம்தேதி மாலை கன்னியாகுமரி வருகிறார். இந்த நிகழ்வை தொடர்ந்து (ஜூலை_24)ம் நாள் அதிகாலை குமரி பகவதியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்கிறார். இதே நாள் மாலை கன்னியாகுமரி_திருவனந்தபுரம் சாலை வழியாக பயணபட்டு விமான நிலையம் செல்கிறார் என மோகன் பகவத் வருகை குறித்து விவேகானந்த கேந்திரம் தலைவர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மோகன் பகவத் வருகைக்காக இன்று இரவு முதலே(ஜூலை_22) விவேகானந்த கேந்திரம் பகுதி முழுவதும் காவல்துறை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட உள்ளது.