நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக அரசி்ன் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ரா. அழகுமீனா.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பி.என்.ஸ்ரீதர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக ரா.அழகுமீனா நியமிக்கப்பட்டார்.
அவர் இன்று(ஜூலை_21) ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது,
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக அரசின் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளும் 100 சதவீதம் நிறைவேற்ற முயற்சி எடுப்போம். பொதுமக்கள் 24 மணி நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம். கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
