அழகிய மண்டபம் ஜூலை 15, கொன்னக்குழி விளையில் காமராஜர் நற்பணி மன்ற சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
வில்லுக்குறி அருகே உள்ள கொன்னக்குழி விளையில் தமிழக காமராஜர் நற்பணி மன்ற சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 122 வது பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் நற்பணி மன்றம் 17 ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வியகுல அன்னை ஆலய பங்குத்தந்தை சேவியர் ராஜ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட உணவு வழங்கல் துணை ஆட்சியர் சுப்புலெட்சுமி கலந்து கொண்டு ஏழை குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்.


குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் நுள்ளிவிளை ஊராட்சி துணை தலைவர் ராஜன். கன்னியாகுமரி கட்டுமான வல்லுநர் சங்கத்தின் பவுண்டர் சேர்மன் பொறியாளர் பாரத் வில்சன் . வழக்கறிஞர் ராபின்சன். தடகள.விளையாட்டு வீரர் ஆறுமுக பிள்ளை. சுங்கான்கடை ஜேடி சாமில் உரிமையாளர் டென்சிங் ஜோஸ் குருந்தன்கோடு வட்டார காங்கிரஸ் தலைவர் பால்துறை. ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் தாமஸ் அறிக்கையை சமர்ப்பித்தார் மற்றும் கொன்னக்குழிவிளை ஆளூர் பரசேரி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீருடை வழங்கப்பட்டது மற்றும் நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேஷ்டி சேலை வழங்கப்பட்டது விழாக்கு வந்த அனைவரையும் அகஸ்டின் மற்றும் ஐரின் செல்வி ஆகியோர் வரவேற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழவுக்கு வந்த அனைவரையும் சங்கத் தலைவர் ஜெயசிங் அருள்ராய் நன்றி கூறினார் விநாயகர் விழா ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

