கோவை குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை பெற்றோர்களுடன் வரவேற்கும் விதமாக ஸ்வாகதம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் குமரகுரு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.இங்கு ஆண்டு தோரும் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக ஸ்வாகதம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இதே போல் இந்த ஆண்டு 2024 ல் குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில் 11 இளங்கலை படிப்புகளில் சேர்ந்துள்ள 476 மாணவர்களை அவர்களது பெற்றோர்களுடன் வரவேற்கும் விதமாக கல்லூரி வளாகத்தில் ஸ்வாகதம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் விஜிலா எட்வின் கென்னடி கலந்து கொண்டு புதிய மாணவர்களை வரவேற்றார். குமரகுரு நிறுவனங்களின் இணைதளாளர் சங்கர் வாணவராயர் தலைமையுரை ஆற்றினார்.
KCLAS லிபரல் ஆர்ட்ஸ் கல்வியின் தத்துவத்தில் வேரூன்றியுள்ளது,தேர்ந்தெடுக்கப்பட்ட ஒழுக்கத்தைப் பற்றிய ஆழமான புரிதலுடன் முழுமையான வளர்ச்சிக்கான பரந்த அடிப்படையிலான கல்வியை வழங்குவதுடன் சமூகத்தின் வெற்றிகரமான, உற்பத்தி செய்யும் உறுப்பினர்களாக மாறுவதற்கான அறிவையும் திறன்களையும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அடிப்படைக் கொள்கைகளில் வேரூன்றியிருந்தாலும், வேகமாக மாறிவரும் பொருளாதாரம் மற்றும் சமூகத்தை KCLAS எதிர்நோக்குவதாக என குமரகுரு கல்வி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
