• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் இந்து துறவி பேரவையினர் வெங்கடேசன் எம்பியை, கைது செய்ய மனு

ByN.Ravi

Jul 8, 2024

மதுரை நாடாளுமன்றத்தில், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், செங்கோலை பற்றியும், மதுரை மீனாட்சி அம்மன் பற்றியும் அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு துறவியர் பேரவை புகார் அடங்கிய மனுவை, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது. மேலும், தபால் மூலம் தமிழக ஆளுநர், ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் தபால் மூலம் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாம்.
துறவியர் பேரவை வழங்கிய மனுவில், மதுரை எம் .பி. சு. வெங்கடேசன் செங்கோல்
பற்றியும், மதுரை மீனாட்சி அம்மன் பற்றியும் நாடாளுமன்றத்தில் தவறாக பேசியதாகவும், அவர் விதியை மீறியதாக, அவர் எம்பி பதவியை ரத்து செய்ய வேண்டும், அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என, பேரவை நிர்வாகிகள் மாநில அமைப்பாளர் சுடலை ஆனந்தன், தலைமையில் நிர்வாகிகள், மதுரை மாவட்ட ஆட்சியிடம் மனு கொடுத்தனர்.