• Fri. Dec 5th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

டெல்லி போராட்டத்தில் போராடி, உயிர் நீத்த விவசாயிகளுக்கு உசிலம்பட்டியில் விவசாய சங்கத்தினர் மலர் தூவி மரியாதை

ByP.Thangapandi

Jul 5, 2024

இலவச மின்சாரம், டெல்லி போராட்டத்தில் போராடி, உயிர் நீத்த விவசாயிகளுக்கு உசிலம்பட்டியில் விவசாய சங்கத்தினர் இணைந்து மலர் தூவி மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினர்.

இலவச மின்சாரத்திற்காக போராடி உயிர் நீத்த விவசாயிகளின் நினைவாக இன்று உழவர் தினம் அனுசரிக்கப்படுகிறது., இலவச மின்சார போராட்டத்தில் உயிர் நீத்த 64 விவசாயிகளுக்கும், டெல்லி போராட்டத்தில் உயிர் நீத்த 713 விவசாயிகளுக்கும், இன்று நாடு முழுவதும் விவசாய சங்கத்தினர் வீர வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் விவசாய சங்கத்தினர் இணைந்து உயிரிழந்த விவசாயிகளின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்., தொடர்ந்து விவசாயிகளுக்கு வீர வணக்கம் என கோசங்களை எழுப்பி வீர வணக்கம் செலுத்தினர்.