உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட நிலையில் ஆர்.டி.ஓ தலைமையிலான அதிகாரிகள் உடலுறுப்புகள் தானமாக வழங்கியவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியைச் சேர்ந்தவர் செல்வேந்திரன்., சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தங்கி அங்குள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் அலுவலக பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர் ஏற்கனவே தனது உடலுறுப்புகளை தானமாக வழங்க பதிவு செய்து வைத்திருந்த நிலையில் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் செல்வேந்திரனின் உடலுறுப்பு தானமாக பெறப்பட்டது.
இந்நிலையில் உடலுறுப்புகளை தானமாக வழங்கிய உடல் சொந்த ஊரான செட்டியபட்டியில் தகனம் செய்யப்பட்டது.
உடலுறுப்புகள் தானமாக வழங்கிய செல்வேந்திரன் உடலுக்கு தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி உசிலம்பட்டி கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் அரசு மரியாதை செலுத்தினர்., தொடர்ந்து செல்வேந்திரன் குடும்பத்தினருக்கு கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் ஆறுதல் தெரிவித்தார்.