• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

திருச்சி விமான நிலைய புதிய முனையம் பயன்பாட்டிற்கு வந்தது..,

Byகதிரவன்

Jun 11, 2024

திருச்சி விமான நிலைய புதிய முனையம் பயன்பாட்டிற்கு வந்தது – புதிய முனையதில் முதல் விமானமாக வந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் அடித்து பயணிகளை விமான நிலைய இயக்குனர் வரவேற்றார்.

திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய விமான நிலையத்தை கடந்த ஜனவரி 2ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த புதிய விமான முனையமானது இன்று செயல்பாட்டுக்கு வந்தது. காலை 6 மணி முதல் புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்ததை அடுத்து சென்னையில் இருந்து முதல் விமானமாக இண்டிகோ விமானம் புதிய முனையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கியது. இதனை வரவேற்கும் விதமாக வாட்டர் சல்யூட் அடித்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து சிங்கப்பூரிலிருந்து புதிய முனையத்திற்கு மற்றொரு விமானம் வந்தது.

விமான நிலையத்தில் புதிய முன்னேற்றத்திற்கு வந்த விமான பயணிகளை திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

விமான நிலையத்தில் புதிய முனையமானது 75 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தின் ஆண்டுக்கு 44.50 லட்சம் பயணிகளை கையாள கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய புதிய முனையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 3,480 பயணிகளை கையாள முடியும்.

புதிய விமான முனையத்தில் உள்ளே செல்லும் பயணிகளை சோதனை இடுவதற்காக 44 இமிக்கிரேஷன் கவுண்டர்களும், அதேபோன்று வெளியே செல்லும் பயணிகளுக்கு 60 இமிகிரேஷன் கவுண்டர்களும் என மொத்தம் 104 சோதனை கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சோதனை கவுண்டர்கள் மூலம் விரைவாக பயணிகளை சோதனை செய்து அனுப்புவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகளும், பயணிகளுடன் வருபவர்களுக்கும் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பணியானது 100% முடிவடைந்து தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

புதிய விமான நிலையத்தின் 10 ஏரோபிர்ஜ்கள் பயன்படுத்த உள்ளன. தற்போது 5 ஏரோபிர்ஜிகள் பயன்படுத்துப்படுகிறது மீதமுள்ள 5 ஏரோ பிர்ஜிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும்.

அதேபோன்று விமான நிலைய புதிய முனையத்தின் சாலையத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளதால் புதிய முனைதிற்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பேருந்துகள் இயக்க வேண்டும் என போக்குவரத்து துறைக்கு விமான நிலைய இயக்குனர் கோரிக்கை வைத்துள்ளார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 17.60 லட்சம் பயணிகள் கையாண்டு உள்ளார்கள். அதேபோல சர்வதேச பயணிகள் மட்டும் 13.50 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர்.

தற்போது இந்த விமான நிலைய புதிய முனையத்தில் இதைவிட அதிகமாக கையாளுவதற்கான திறன் கொண்டுள்ளதால் சர்வதேச விமான நிலைய புதிய முனையத்தில் இன்னும் அதிகமான பயணிகளை கையாண்டு கடந்த ஆண்டைவிட கூடுதலாக பல லட்சக்கணக்கான பயணிகளை கையாள முடியும். அதே போன்று புதிய முனையத்தில் விஐபிக்கு என்று தனி பாதை அமைத்துள்ளனர்.

புதிய விமான நிலையத்தின் முகப்பில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் உள்ளே கலை வடிவில் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மரத்திலான நடராஜர் சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை முதல் விமானமாக சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் வந்ததை அடுத்து தொடர்ந்து உள்நாடு மட்டும் வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் விமான நிலையத்தின் புதிய முனை தெற்கு வந்து செல்கின்றன.