• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜூன் 24ல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூடுகிறது

Byவிஷா

Jun 7, 2024

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் 2 நிமிடங்களில் தன்னுடைய உரையை முடித்தார்.

இதன் காரணமாக சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையை முழுமையாக வாசித்தார். இதனால் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பான சூழல் நிலவியது. தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்ற நிலையில், தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, ஜூன் மாதம் 24ஆம் தேதி மானிய கோரிக்கை கூட்டத்தொடர் தொடங்க இருப்பதாக அறிவித்தார்.
மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கும் எனவும், எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கபப்டும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.