இந்திய பல் மருத்துவ சங்கம் திருச்செங்கோடு கிளையின் சார்பாக மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணி திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் ஆரம்பித்து நான்கு ரத வீதிகள் வழியாக சென்று மீண்டும் அண்ணா சிலையை வந்தடைந்தது. இதில் திருச்செங்கோட்டின் அனைத்து பல் மருத்துவ சங்க உறுப்பினர்களும், திருச்செங்கோடு கே எஸ் ஆர் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் குமாரபாளையம் ஜே கே கே நடராஜா பல்மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியின் போது புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வும், துண்டுப் பிரசுரங்களும், மாணவர்களின் மூலம் தெருநாடகமும் நடைபெற்றது. இப்பேரணியை திருச்செங்கோடு துணை காவல் ஆய்வாளர் சுப்ரமணியம் அவர்கள் தொடங்கி வைக்க திருசெங்கோடு IDA president Dr. R. Sakthivel தலைமையில் செயலாளர் Dr. A. Stalin வழிநடத்தி சென்றார். இப்பேரணியின் போது KSR பல் மருத்துவ கல்லூரியின் முதல்வர் Dr. சரத் அசோகன் முன்னிலையில் மாணவர்கள் தெருநாடகம் மூலம் மிகச்சிறப்பாக புகையிலை பயன்பாட்டின் விளைவுகளை விளக்கி கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.