தூய்மை பணியாளரை தாக்கிய காங்கிரஸ் கவுன்சிலர் கோவை பேரூர் பேரூராட்சி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 வது வார்டு கவுன்சிலர் மயில்சாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி குப்பை வாகனம் ஓட்டுனர்கள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கடந்த 23 ஆம் தேதி கோவை பேரூர் பேரூராட்சி 12 வது வார்டு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் தாக்கியதில் தூய்மைபணியாளர் பாபு என்பவர் படுகாயம். காயமடைந்த பாபு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

சம்பவத்தன்று கோவை மாநகராட்சியில் ஒப்பந்த குப்பை டிப்பர்லாரி ஓட்டுனராக கோவை புல்லுக்காடு பகுதியை சேர்ந்த் பாபுபாய் என்பவர் கடந்த 20 வருடங்களாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் பணியில் இருந்தபோது. கான்ராக்டரின் உத்திரவின் பேரில் கோவை பேரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பை எடுக்க எடுக்க சென்ற நிலையில் வாகன பழுதால் கோவை பேரூர் பேரூராட்சி பாரதி நகர் பகுதியில் உள்ள ஆர்ச்சில் மோதி வாகனத்தின் சக்கரம் குழியில் சிக்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த வழியாக வந்த பேரூர் பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் மயில்சாமி என்பவர் வாகனத்தை எடுக்கு வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடுள்ளார். மேலும் வாக்குவாதம் முற்றிய நிலையில் மயில்சாமி, பாபுபாயை தாக்கியதில் உள்காயங்கள் ஏற்பட்டதால் பாபுபாய் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை மேற்கொண்டார்.
இந்த நிலையில் ஓட்டுனர் பாபுபாய் என்பவரை தாக்கிய காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பை வாகனம் ஓட்டுனர்கள் வாகனங்களை திறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர். மேலும் நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாகவும் உறுதியளித்த நிலையில் ஓட்டுனர்கள் தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபட்டனர்.