தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் ஆலோசனையின் பேரில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி வருகின்றனர். தொடர்ந்து, அதிமுகவின் பல்வேறு நிர்வாகிகள் தினசரி பொறுப்
பேற்று நீர் மோர்வழங்கி வந்தனர்.
அதிமுகவின் மகளிர் அணி சார்பில் ,மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் குருவித்துறை வனிதா கட்டத்தேவன் சார்பில் இன்று பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். .
மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வனிதா கட்டதேவன் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார். இதில், நிர்வாகிகள் சோழவந்தான் 12வது வார்டு கவுன்சிலர் வார்டு செயலாளர் ரேகா ராமச்சந்திரன், அம்மா பேரவை இணைச் செயலாளர் துரைக்
கண்ணன், மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ், ஏழாவது வார்டு செயலாளர் எஸ்.பி. மணி, வெடிகுண்டு ராசு, பி.ஆர்.சி. நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இளைஞர்அணி மாவட்ட இணைச் செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.