• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கோவை மாவட்ட அனைத்து வகை கட்டுமான பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

BySeenu

May 20, 2024

கோவை மாவட்ட அனைத்து வகை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் 2024-25 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவர்,செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை மாவட்ட அனைத்து வகை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நிகழ்ச்சி கோவை புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. விழாவில் முன்னதாக சங்கத்தின் முன்னால் தலைவர் ரமேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.. இதனை தொடர்ந்து சங்கத்தின் புதிய தலைவராக விஜயகுமார், துணைத் தலைவராக செவ்வேல், செயளாலராக ராஜரத்தினம்,, பொருளாளராக மணிகண்டன் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொது பணித்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம், மற்றும் பொறியாளர் வெங்கடசுப்ரமணி ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். இதனை தொடர்ந்து பதிய தலைவர் விஜயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
பொறியாளர்களின் நலன் கருதி துவங்கபட்ட இச்சங்கம் மூன்று ஆண்டுகளாக பல்வேறு சமூக பணிகளை முன்னெடுத்து உள்ளதாக தெரிவித்தார்., வருகின்ற நவம்பர் மாதம் 22,23,24 ஆகிய மூன்று தேதிகளில் கட்டுமான கண்காட்சியை கொடிசியா வளாகத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும்,இதனால் கட்டுமானம் சார்ந்த அனைத்து துறையினரும் பயனடைய முடியும் என்றார்.

கடந்த காலங்களில் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக கட்டுமான பொருட்களான சிமெண்ட், கம்பி, செங்கல், மனல், உள்ளிட்ட அனைத்து பொருட்கள் விலை உயர்வை கட்டுபடுத்த , தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கு எடுத்து சென்று மனுவாக அளித்துள்ளதாகவும், இதற்கு அரசிடம் இருந்து நல்ல பதிலும் கிடைக்க பெற்றுள்ளது என்றார். கட்டுமான பணிகளுக்கு தேவையான உரிமங்களை, பெற மாநகராட்சி நிர்வாகம் தற்பொழுது அதிக அளவில் காலதாமதம் ஏற்படுத்தி வருகிறது, இந்த உரிமங்களை மாநகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் ஆய்வு செய்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், சங்கத்தின் துணை செயலாளர் பிரேம்குமார் பாபு, துணை பொருளாளர் ரவி, மற்றும் அலுவலக நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் திருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.