இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவை நினைவு கூறும் வகையில். கடந்த 30_ஆண்டுகளாக, பெங்களூரா காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையில் தொடர்ந்து நடைபெற்ற ஜோதி வாகனப் பயணம் கொரோன காலத்தில் இரண்டு ஆண்டுகள் தடைபட்டது. அதன் பின் தொடர்ந்த ஜோதி வாகனப் பயணம் எஸ்.எஸ். பிரகாசம் மரணத்தின் காரணமாக தடைபட்டது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு எம்.எஸ் திரவியம் தலைமையில் ஜோதி யாத்திரை குமரியிலிருந்து புறப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் சென்றது போல் இந்த ஆண்டு கடந்த 15_ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்ட நிலையில், அந்த வாகன ஜோதி பயணத்தை நடத்தக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் அறிக்கையால் தடை பட்ட நிலையில், பெங்களூருவை சேர்ந்த துரை தலைமையில் இருந்து இவ்வாண்டு மீண்டும் வாகனப்பயணம் புறப்பட்டு நேற்று இரவு கன்னியாகுமரி வந்தனர். வாகனப்பயண ஜோதி யாத்திரை குழுவினரை தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ஆர்.ராஜேஸ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் உதயம் துணை செயலாளர் தாமஸ் ஆகியோர் வரவேற்றனர்.
கன்னியாகுமரி அண்ணல் நினைவு காந்தி மண்டபம் முன்பிருந்து இன்று காலையில் தொடங்கிய வாகன ராஜீவ் காந்தி ஜோதி பயணத்தை, தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ் குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் மற்றும் கன்னியாகுமரி பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் மற்றும் பல்வேறு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
