கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. தினம் பல ஆயிரம் பன்மொழி இந்தியா மற்றும் பன்னாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். முக்கடல் சங்கம கடல் பரப்பு புனித நீராடும் இடமாக மன்னர் ஆட்சிக் காலம் முதல் இன்று வரை தொடர்கிறது.
தென் இந்திய பெருங்கடல் பகுதியில் அலை கூட்டம் அர்பரித்து எழும் எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கையை. இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் எச்சரித்த நாளில் தான்.

குமரி மாவட்டத்தில் லெமூரியா கடற்கரை பகுதியில் அலை சீற்றத்தில் சிக்கி திருச்சி தனியார் மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 5_பேர் மரணம் அடைந்த அதே தினத்தில். இரண்டு மீனவர்கள்,ஒரு சிறுமி என 8-பேர் ஒரே நாளில் கடலில் மூழ்கி மரணம்,குமரியையே சோகத்தில் ஆக்கிய நிகழ்வானது.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில். பொது மக்கள் கடலில் உள்ள சிறு,சிறு குன்றுகளில் ஏரக்கூடாது என எச்சரிக்கை செய்திருந்தாலும் சுற்றுலா பயணிகள் அத்தகைய சிறு மலை குன்றுகளில் ஏரி புகைப்படம்,செல்ப்பி எடுப்பது ஒரு தொடர்கதை. காவல்துறை மற்றும் சுற்றுலா காவலர்கள் எத்தனை முறை தடுத்தாலும் செவி மடுக்காத பொது மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் ஒலி பெருக்கி பொருத்தப்பட்ட புறக்காவல் நிலையம் நேற்று (மே_14)ல் திறக்கப்பட்டது.

புறக்காவல் நிலையத்தில் காவல்துறை, சுற்றுலா காவலர்கள், கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் இணைந்து 24 மணிநேரமும் கண் காண்பிப்பது தொடரும் என உயர் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
