• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பிரபல குணச்சித்திர நடிகை மருத்துவமனையில் சேர்ப்பு…

Byகாயத்ரி

Nov 9, 2021

காதலுக்கு மரியாதை படத்தில் நடிகை ஷாலினியின் பாட்டி வேடத்தில் நடித்த, பிரபல மலையாள குணச்சித்திர நடிகை கேபிஏசி லலிதா உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


கேரள உலகில் சிறந்த குணச்சித்திர நடிகையான கேபிஏசி லலிதா, இரண்டு முறை தேசிய விருது பெற்றவர். தமிழ் சினிமாக்களில் அம்மா வேடங்களில் சிறப்பாக நடித்தவர்.மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தில் மேடி மாதவனின் அம்மாவாக நடித்திருப்பார்.மற்றொரு படம் காதலுக்கு மரியாதை… இதில் ஷாலினியின் அம்மாவாக… கிளைமேக்சில் எடுத்துக்கோங்க.. அவளை அவன்கிட்டே கொடுத்துடுங்க என்று பேசும் வசனங்களினால் ரசிகர்களினால் ஏகமாக பாராட்டப்பட்டவர்.


இந்நிலையில், நடிகை கேபிஏசி லலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு கொச்சியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சஅனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.