• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆட்டோ ஓட்டுநர்கள் ரயில் பயணி இளைஞர்களை சரமாரி தாக்கிய வீடியோ

BySeenu

Apr 27, 2024

கோவை ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஸ்டண்ட் என தெரியாமல் சிறுநீர் கழித்ததால் ஆட்டோ ஓட்டுநர்கள் சென்னையை சேர்ந்த ரயில் பயணி இளைஞர்களை சரமாரி தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சார்ந்த அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் கோவை ஈஷா மையத்திற்கு செல்ல கோவை வந்தனர். ஈசா சென்று விட்டு மீண்டும் ரயில் மூலம் சென்னை செல்ல கோவை ரயில் நிலையம் வந்துள்ளனர். இந்த நிலையில் ஒரு இளைஞருக்கு அவசரமாக சிறுநீர் வந்ததால் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஸ்டாண்டு அருகே சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சிறுநீர் கழிக்க கூடாது என கூறி அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை அடுத்து அந்த அடி வாங்கிய நபர் நண்பர்களை அழைத்தவுடன் நண்பர்களும் அங்கு வந்து ஆட்டோ ஓட்டுனர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது அங்கிருந்த ஹெல்மெட்டுகளை எடுத்து தாக்கியும், கால்களாக அடித்து விரட்டும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் இளைஞர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக பந்தைய சாலை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.