• Wed. May 22nd, 2024

ராம நவமியில் சூரிய திலகம்.. அயோத்தி பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி

Byதரணி

Apr 17, 2024

அயோத்தியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ராமர் கோவிலில் பால ராமருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ராம நவமி கொண்டாட்டத்தின் சிகர நிகழ்வான சூரிய அபிஷே மகோத்சவம் இன்று நடைபெற்றது. நண்பகல் 12.01 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. பால ராமரின் நெற்றியில் சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு சூரிய ஒளிக்கதிர் விழுந்து திலகமிட்டது. நெற்றித் திலகத்தின் அளவு 58 மி..மீ. அளவுக்கு இருந்தது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *