• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

சிங்கை ராமச்சந்திரனுக்கு பல்லடத்தில் முன்னணி நடிகர் ரவிமரியா வாக்கு சேகரிப்பு

ByS.Navinsanjai

Apr 3, 2024

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர் மற்றும் புறநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவை பாராளுமன்ற தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து முன்னணி நடிகரான ரவி மரியா பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான இவர் இன்று இப்பகுதியில் பல்வேறு பகுதி பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்தார் அப்போது திமுக ஆட்சியால் தன் வீட்டில் இருக்கும் ஏசியைக் கூட மூன்றில் ஒன்றை கழட்டி விட்டேன் என்றும் மின்சார கட்டணம் தன்னாலே சமாளிக்க முடியவில்லை என்றும், வீட்டு வரி எட்டாயிரம் கட்டிக் கொண்டிருந்ததை தற்போது 16,000 ஆக கட்டிக் கொண்டிருப்பதாகவும், பேசிய அவர் பொதுமக்களிடமும் கேட்டறிந்தார். அதற்கு பொது மக்களும் மின்சார கட்டணம் வீட்டு வரி போன்ற பல்வேறு பிரச்சனைகளால் நிம்மதி இல்லாமல் இருப்பதாகவும், தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது வெள்ள நிவாரணத் தொகை 5000 கோடி தமிழக அரசுக்கு வழங்கியதை நிர்மலா சீத்தாராமன் அதற்கு கணக்கு காட்டுங்கள் என்று தெரிவித்தது. குறித்தான கேள்விக்கு அந்த பணம் மக்களுக்கு போய் சேரவில்லை. பல்வேறு பகுதிகளுக்கு நான் சென்று வருகிறேன். ஆனால் பொதுமக்களுக்கு உரிய நிவாரணத் தொகை போய் சேர்ந்ததாக யாரும் தெரிவிக்கவில்லை. தன்னிடமும் பல கோரிக்கைகளை விடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார், ஒற்றை செங்கல்லை வைத்து உதயநிதி எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த பிரச்சார பேச்சுக்கு உதயநிதிக்கு பதில் அளித்த அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் 38 எம்பிக்கள் என்ன செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.