• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே கள்ளக்காதல் பிரச்சனையில் பிராந்தி பாட்டிலால் தாக்கி ஒருவர் கொலை

ByN.Ravi

Apr 2, 2024

மதுரை மாவட்டம், சோழவந்தான் காவல் நிலைய திருமால்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வினித் 30. அப்பா பெயர் சங்கிலி என்பவரது மனைவி கோகிலா என்பவருக்கும், சோழவந்தான் பேட்டை சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்தனகுமார் 29 . என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அவரது வீட்டிற்கு சென்று வசித்து வந்த கோகிலாவை பெரியவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மீண்டும், வினித்தின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் சோழவந்தானிலிருந்து திருமரல் நத்தம் கிராமம் வழியாக மேற்படி சந்தனகுமார் மற்றும் அவரது தந்தை ஆகியோர்
மைக் செட் போடுவதற்காக நான்கு சக்கர வாகனத்தில் சென்றபோது, இதனை அறிந்து திருமால் நத்தம் கிராமத்தில் நின்று கொண்டிருந்த வினித், அஜித் குமார், சதீஷ் உள்ளிட்ட ஆறு நபர்கள் பெருமாள் மற்றும் சந்தனகுமார் மீது கல்லால் எறிந்து வாகனத்தை விட்டு, கீழே இறங்கியவுடன் பீர் பாட்டில் உள்ளிட்ட பிராந்தி பாட்டிலால் தாக்கியதில், பெருமாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். சந்தனகுமார் ரத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக சோழவந்தான் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.