• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தாராப்பட்டியில், அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வாக்குகள் கேட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம்

ByN.Ravi

Mar 31, 2024

மதுரை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு, வாக்குகள் கேட்டு
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தாராப்பட்டி கொடிமங்கலம், கீழமத்தூர், துவரிமான் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தாராப்பட்டி மக்கள் எப்போதும் அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார்கள். இந்த தேர்தல் உண்மைக்கும், பொய்க்கும் நடக்கிற தேர்தல் இந்த தாராப்பட்டி பெண்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டிய பெண்கள் என்று பெயர் பெற்றவர்கள். இன்று அனைத்து விலைவாசிகளும் கூடிவிட்டது. மின்சார கட்டணம் உயர்ந்துவிட்டது. சண்டாள பாவிகள் வீட்டு வரியையும் உயர்த்தி விட்டார்கள் சென்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக ஓட்டு கேட்கும் போது அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார்கள். இப்போது தகுதி உள்ள மகளிர்க்கு மட்டும் தருவதாக கூறுகிறார்கள். அனைத்தும் பொய்யாகவே வாக்குறுதியை தருகிறார்கள் .
அம்மா கொண்டு வந்த அனைத்து திட்டத்தையும் முடக்கி விட்டார்கள். ஐந்து பவுன் நகை திருப்பி தருவோம் என்று சொன்னார்கள். இதுவரை திருப்பித் தரவில்லை யாருக்கும் கொடுத்தார்களா, என்று பெண்களைப் பார்த்து கேட்கிறேன் .
கல்வி கட்டணத்தை ரத்து செய்வேன் என்று சொன்னார்கள் ரத்து செய்யவில்லை, ஆடு மாடு கொடுத்ததை நிறுத்தி விட்டார்கள். அம்மா உணவகத்தை நிறுத்தி
விட்டார்கள். தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். அனைத்து திட்டத்தையும் நிறுத்திவிட்டு இப்போது, அதை செய்வோம் இதை செய்வோம் என பொய் வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார்கள். அவர்களை நம்பாதீர்கள்.
நான் இந்த தொகுதியில் முதல் முறையாக 2011 இல் நிற்கும்போது நான் வந்த சாலை மிக மோசமான நிலையில் இருந்தது. ஆனால், இன்று மதுரை மாநகராட்சிக்கு இணையாக இந்த சாலையை மாற்றியது எனது சாதனை.
மேலும் ,இந்த பாராளுமன்ற தேர்தலில் நமக்கு முதலில் ஆதரவு கொடுத்தது எஸ் டிபி ஏ கட்சியினர் அவர்கள் தான் முதலில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து மிகப்பெரிய மாநாடு நடத்தி ஆதரவு கொடுத்தார்கள். ஆகையால், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்கிற இரண்டு கட்சிகளும் நம்மை ஏமாற்றுகிறது. மேலும், அவர்கள் வாயில் வடை சுடுகிறார்கள்.
100 ரூபாய் கேஸ் மானியம் கொடுக்காதவர்கள் 500 ரூபாய் மானியம் எப்படி கொடுப்பார்கள். தமிழ்நாட்டில் பெண் சிசுக்கொலையை தடுத்து தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்து பெண்களை பாதுகாத்தவர் அம்மா. ஆகையால், அதிகாலையில் மங்களகரமாக இந்த தாராப்பட்டி கிராமத்தில் பிரச்சாரத்தை துவங்கினால் வெற்றி நிச்சயம் என்ற சம்பிரதாயத்தை மாற்றாமல் அனைத்து மக்களும் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றியை தேடி தர வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து, மதுரை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சரவணன் பேசும்போது :
தாராப்பட்டி கிராமத்திலிருந்து உங்கள் ஊரிலிருந்து பிரச்சாரத்தை துவக்குகிறேன் என்று கூறினார். உடனே மறித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நமது ஊரிலிருந்து துவக்குவதாக கூறுங்கள் இது நமது ஊர் உங்கள் ஊர் என்று அவர்களை பிரிக்க வேண்டாம் என்று திருத்தி சொல்ல சொன்னார்.
மேலும், பெண்கள் பொதுவாக ஜவுளி கடைக்கு சென்றால் அடுத்தவர் சேலை எடுப்பதை பார்த்து நாம் சேலையை தேர்ந்தெடுப்போம் ஒரு சாதாரண சேலையை வாங்குவதற்கு கம்பேர் பண்ணி பார்க்கும் நீங்கள் ஒரு எம் பி யை தேர்ந்தெடுக்கவும்.
அதிமுக வேட்பாளராகிய நான் ஒரு டாக்டர் எதிர்க்கட்சி வேட்பாளர் ஒரு ரைட்டர் நான் டாக்டர் உங்கள் பர்ஸை பார்க்காமல் பல்ஸை மட்டுமே பார்த்து மருத்துவம் பார்க்கும் எளிமையான டாக்டர். நான் மருத்துவராகியது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொண்டு வந்தகல்வித் திட்டத்தின் மூலமாக மருத்துவர் ஆனேன். இப்ப உள்ள நீட் இருந்திருந்தால் மருத்துவராகி இருக்க மாட்டேன்.
இப்போதுள்ள கம்யூனிஸ்ட் வேட்பாளர் எப்போது வருவார் என்று தெரியவில்லை கடந்த ஐந்து ஆண்டுகளில் வராதவர் இப்போது வருகிறார். அதுவும் இரவில் வந்துவிட்டு போகிறார். மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகளிலே வசதியான வேட்பாளராக அவர் இருக்கிறார். புத்தகம் ஒன்று போட்டு இருக்கிறார். அவர் புத்தகத்தை படிப்பதற்கு நேரமில்லை ஆகையால், புத்தகத்தை படித்து பார்ப்பதற்கு பைனாக்குலர் தான் வேண்டும் பைனாக்குலர் இருந்தால் தான் பார்க்க முடியும் அதில் ஒன்றுமில்லை .
இப்போது டிவி சீரியல் எடுத்துக் கொண்டிருக்கிறார். இவர், புத்தகங்களுக்கு ராயல் டீ வாங்குகிறார். இவர் ஒரு கார்ப்பரேட் கம்பெனி வேட்பாளர் போல் செயல்படுகிறார். இவர் வசதியான கம்யூனிஸ்ட் வேட்பாளராக உள்ளார் 4000 ரூபாய்க்கு சட்டையும் 7000 ரூபாய்க்கு செருப்பும் அணிந்து செல்கிற கம்யூனிஸ்ட் வேட்பாளராக உள்ளார். வித்தியாசமான கம்யூனிஸ்ட் ஆக உள்ளார். எளிமையான எண்ணை எம்பியாக தேர்ந்தெடுத்து வெற்றி பெறச் செய்ய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். இதில் ,மதுரை மேற்கு தொகுக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.