• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Mar 15, 2024

ஊக்கமூட்டும் மேற்கோள்கள் 

விளையாட்டுக்கு தேவை பயிற்சி.. மாணவர்களுக்கு தேவை தேர்ச்சி.. குழந்தைகளுக்கு தேவை மகிழ்ச்சி.. இளைஞர்களுக்கு தேவை புகழ்ச்சி.. எல்லோருக்கும் தேவை விடாமுயற்சி..!

கடல் பெரியது தான் ஆனால் சந்தோசங்களை தருவது என்னவோ சிறு சிறு அலைகள் தான் ஆகையால் காணுவதை காட்டிலும் கிடப்பதை கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவோம்..!

வாழ்க்கையின் சந்தோசத்தை பிற நபரிடம் தேடாதே.. உன் சந்தோசத்தை உனக்குள் தேடு.!

விதை போராடுவதால் மட்டும் தான் மண்ணிலிருந்து வெளிவந்து ஒரு மரமாக கம்பிரமாக நிற்கிறது.. நாம் போராடினால் மட்டும் தான் துன்பங்களை கடந்து தடைகளை உடைத்து கம்பிரமான மனிதராக மிளிர முடியும்.

வாழ்வின் விடை மரணம், எவராலும் மறுக்க முடியாது. இடையில் வாழும் வாழ்க்கையை சந்தோசமாக வாழுங்கள்.!