• Fri. Dec 5th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர் பிரீமியர் லீக் துவங்கும் தேதி அறிவிப்பு…

BySeenu

Mar 13, 2024

கோவையில் உள்ள மீடியா ஒன் மற்றும் தெளசண்ட் பிரிக்ஸ் ஆகியவை இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் பிரீமியர் லீக் என்ற கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர்கள் பங்கேற்பர். அவர்களுக்கான அடுத்த கட்ட நகர்விற்கு ஊக்குவிக்கும் இந்த CPL போட்டி அமைந்து வருகிறது.

அந்த வீரர்களுக்கு TNPL மற்றும் லீக் பிளேயர்ஸ் உடன் சேர்ந்து விளையாட இந்த CPL போட்டி மிகவும் உதவியாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டிற்கான போட்டி நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டன.

இது குறித்தான அறிமுக நிகழ்ச்சி கோவை லீ மெரிடியன் (Le Meridien) ஹோட்டலில் நடைபெற்றது.

ஏப்ரல் 5ஆம் தேதி இந்த CPL போட்டி துவங்க உள்ளதாகவும் இப்போட்டிகள் மூன்று வாரங்கள் நடைபெற உள்ளதாக விளையாட்டின் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த போட்டியில் 10 அணிகளும் 160 வீரர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் சன்னி CEO பவிழம் ஜுவல்லர்ஸ், லிஜோ சுங்கத் MD பவிழம் ஜுவல்லர்ஸ்,C.K. கண்ணன் MD வின்னர்ஸ் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ்,வாவிகல் டாட்டா MD மாதேஷ் குமார் ஜெயபால், S.P பிரகாஷ் MD மீடியா ஒன்,ஜெரால்டு சுஷில் பிரசாத் MD தொளசண்ட் பிரிக்ஸ், அசோக் MD போத்திஸ், டாக்டர் செந்தில் ராயல் கேர் மருத்துவமனை, சம்பத் MD காட்டன் மெட்ரோபாலிடன் கிளப்,குரு கிருஷ்ணன் MD அபிராமி பம்ப்ஸ்,ராமன் உன்னி MD மண்ணாடியார் கார்கள்,விஜய் ஆனந்த் MD சர்ஃபைன்,பிலிப் MD டெக்ஜேய்ஸ்,பாரதி கண்ணன் MD எம்.எஸ்.டி அகாடமி, சிவகுமார் MD எவரெஸ்ட் புரொமோட்டர்ஸ் & பில்டர உட்பட முன்னனி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.