• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நிர்பந்தம் காரணமாக திமுகவுக்கு சென்று சரணடைய வேண்டிய நிலைமை கமலஹாசனுக்கு ஏற்பட்டுள்ளது – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி..

BySeenu

Mar 10, 2024

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்.

தமிழகத்தில் மூத்த நடிகர் அரசியல் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என கட்சியை ஆரம்பித்தார். தற்போது கமலஹாசன் தி.மு.க பக்கம் இணைந்துள்ளார். அரசியல் என்பது கடினமான வேலை, கொள்கை அரசியல் என்பது ஒரு கடினமான வேலை. கமலஹாசன் திமுக கூட இணைந்திருப்பது நம் அனைவருக்கும் கூட தெரிந்துள்ளது. இத்தனை ஆண்டுகாலமாக இருந்த அவர்களின் தொண்டர்கள், ஒரு மாற்றம் யாருக்கும் சாராமல் ஒரு மையமாக இருக்கும் அவரின் அரசியல் நிலைப்பாடாக இருந்தது. தற்போது முற்றிலும் மாறி திமுக பக்கம் சென்றிருப்பது என்பது திமுக என்ற தீய சக்தி ஆதிக்கம் இருக்கின்றது.

கமலஹாசன் தன்னை நம்பி வந்தவர்களும் ஒரு மாற்றம் கொடுக்க வேண்டும் என்பதில் அரசியலை ஆரம்பித்தாரோ , மறுபடியும் அவர் வருவதற்கு முன் எங்கே இருந்தது அதே மாதிரி ஆகிவிட்டது.இதே நேரத்தில் என்னுடைய வேண்டுகோள் தமிழகத்தில்
மாற்றத்தை யாரெல்லாம் விரும்புகிறீர்களோ ஒரே ஒரு கட்சி பாஜக தான்.தமிழகத்தில் மாற்றங்களை கொடுக்க வேண்டும் என்றால் பாஜகவால் மட்டும் தான் முடியும்..கமலஹாசனுக்கு இருக்க கூடிய நிர்பந்தம்.மீண்டும் திமுகவுக்கு சென்று சரணடைய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.இது எப்போவோ நடந்திருக்க வேண்டும்.இப்போ நடந்துள்ளது.கமலஹாசன் திமுக உடைய நிலைப்பாட்டில் தான் செல்ல வேண்டும் என்பது கவலை அளிக்கிறது.

ஜாபர் கைது வழக்கில்,இன்னும் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அதை எல்லாம் என்.சி.பி அதிகாரிகள் கண்டுபிடித்து தமிழக மக்கள் முன்னால் நிறுத்த வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. கிணறு தோண்ட தோண்ட பூதம் வரும் கதை போல யாரெல்லாம் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தால் கூட அவர்கள் மீது நடவடிக்கை என்.சி.பி செய்ய வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய பிரச்சனைகள் பற்றி நடிகர்கள் வாய் திறந்தால் எப்படி படத்தை ரிலீஸ் பண்றது.தமிழகத்தில் இன்றைக்கு நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதை நான் திரும்ப கேட்கிறேன்.அவர்கள் சமூக ஆர்வலர்களாக இருக்கிறார்களா? சாமானியவர்களா? ரோட்டில் மக்கள் பிரச்சனை பார்க்கின்றவர்களா?.எதற்கு எடுத்தாலும் நடிகர்கள் தான் பேசணும் எனபதிலிருந்து வெளியே வரவேண்டும். அவர்கள் வட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு நடிகர்களின் நிலைமை அரசியல் சார்பாக உள்ளது. இன்று சமுதாயத்தில் யார் பண்ணுகிறார் பணி செய்கிறார்கள் அவர்களின் குரல் கம்பீரமாக ஒளிக்க வேண்டும் என்பதையும் சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு.நடிகர்களுடைய வேலை நடிப்பது மட்டும் தான்.சினிமா வேறு, அரசியல் வேறு, சினிமாவில் கை தட்டி பார்ப்பார்கள், அரசியல் பார்ப்பபார்களா என்று தெரியாது.இந்தியாவில் இருக்கக்கூடிய பல தலைவர்கள் அரசியலுக்கு வந்தார்கள் இதற்கு கமலஹாசன் சிறந்த உதாரணம்.அரசியல் என்பது 24 மணி நேரமும் செய்யக்கூடிய ஒரு பணி.நடிகர்களை விட்டு விடுங்கள்.

டெக் பார்க் அமைப்பதற்கு எத்தனையோ இடங்கள் உள்ளது. திமுக ஆட்சி புதிதாக டெக் பார்க் அமைக்கிறார்கள் என்றால் பக்கத்தில் அவர்கள் நிலம் வாங்கி இருப்பார்கள். மக்கள் இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.திமுக ஆட்சியில் வளர்ச்சி என்பது கேள்விக்குறி.

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, மாமனா மச்சானா அவர் ஏன் ரிசைன் பண்ணினார் என்று அவர்கிட்ட தான் கேட்கணும். தெரியாதா யூகங்களுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும். அவருக்கு நான் மாமனும் இல்லை மச்சானும் இல்லை, தெரிந்திருந்தால் போன் பண்ணு சொல்லி இருப்பார்.

அரசியலுக்கு நான் வந்திருப்பது மக்கள் பணி செய்வதற்கு தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு. 2026 முக்கியமான தேர்தல், தமிழகத்தில் சாக்கடையில் சுத்த செய்ய வேண்டும்.என்னுடைய குறிப்பு முழு நேரம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.பாராளுமன்றத்தில் யார் இருப்பது என்பது கட்சி முடிவு செய்ய வேண்டும்.கோயம்புத்தூரில் வளர்ச்சி குறைந்துள்ளது.தமிழகத்தில் இன்றைக்கு இருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினருக்கு விஷன் கிடையாது.

தேர்தலுக்கு நாங்கள் எப்போதே தயாராகி விட்டோம். தேர்தலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம் தமிழ்நாட்டில் ஒரு சரித்திர தேர்தலாக இருக்கும் என்ற நாங்க நம்புகிறோம்.நாங்களும் பத்திரிக்கையாளர் மீது கோபத்தில் தான் இருக்கின்றோம். எங்கள் கட்சி 25 சதவீதத்திற்கு மேல் உள்ளதை 18 சதவீதம் என்று போடுவது.கனிமொழி அடையாளம் அவரது அப்பா கருணாநிதி,அவர் சொன்னார் பாஜக அங்கொன்று இங்கொன்று உள்ளது என ஆனால் இன்றைக்கு 303 எம்பி உள்ளது.கனிமொழிக்கு அதே பாடத்தை நான் சொல்கிறேன் அப்பா பெயரை வைத்து ஓட்டு வாங்குங்கள்.மையம் எல்லாம் இல்லை எல்லோருடைய கலவையாக இருப்பது பாஜகவின் கட்சி.கூட்டணி கட்சிகள் இருக்கக்கூடிய மற்ற மாநிலத்திலிருந்து பாஜகவில் தேர்தலில் நிற்கக்கூடிய லிஸ்ட் கொடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

திருப்பூர் ,கோவையில் வளர்ச்சி பிரச்சனை உள்ளது, திருப்பூர் இன்னும் வேகப்படுத்த வேண்டும். நீலகிரியில் டீ பிரச்சனையாக உள்ளது.இங்க இருக்கக்கூடிய எம்பிக்கள் நான்கு வழி சாலை வேண்டாம் என்கிறார்கள்.அப்புறம் எப்படி வளர்ச்சி அடையும்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பாவம்,2019 தேர்தல் எப்படி நடத்துனார் என்று தெரியும், குடும்ப பாரம்பரியத்தை பேசி பேசியே அளிந்துள்ளார். பொது மேடையில் வன்மத்தை கக்கியுள்ளார். இன்றைக்கு அவர் பேசியதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.