• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை நகராட்சியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்.., நகர் மன்ற தலைவர் துரைஆனந்த தலைமையில் நடைபெற்றது…

ByG.Suresh

Mar 8, 2024

உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகங்கை நகராட்சியில் பணிபுரியும் மகளிர்களை போற்றும் விதமாக
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் பெண்கள் ஒன்று சேர்ந்து மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் நகர்மன்ற அலுவலகத்தில் வண்ணக் கோலமிட்டும், கேக் வெட்டியும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் வந்தவர்களுக்கு சந்தனம், குங்குமம் கொடுத்து வரவேற்று பொன்னாடை போர்த்தி கௌரவித்து நகராட்சிகள் பணிபுரியும் பெண்களை சிறப்பான முறையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் நுகர்வோர் அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், துப்புரவு பணியாளர்கள்,நகர் புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் வார்டு கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், பாக்கியலட்சுமி விஜயகுமார், ஆறு. சரவணன், மதியழகன், சுபைதா பேகம் மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆனந்தி ஆனந்த ,நகர இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரன் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.