• Sun. Nov 2nd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

திருச்செங்கோட்டில் பிளக்ஸ் வைக்க அனுமதி மறுத்த இடத்தில் பெரிய பிளக்ஸ் வைக்கப்பட்டதால், அதிமுகவினர் சாலை மறியல்….

ByNamakkal Anjaneyar

Mar 2, 2024

காவல்துறை பிளக்ஸ் வைக்க அனுமதி மறுத்த இடத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சட்டமன்ற உறுப்பினர் Er .ஈஸ்வரன் செய்த சாதனைகள் என பெரிய பிளக்ஸ் வைக்கப்பட்டதால் … அதிமுகவினர் சாலை மறியல்….

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் ரவுண்டானா மேம்பாலம் பகுதியில் அரசியல் கட்சியினரோ மற்றவர்களோ யாரும் விளம்பர பேனர் வைக்க கூடாது அவ்வாறு வைப்பதால் சில அசம்பாவிதங்கள் நடந்துள்ளது எனவும், எனவே விளம்பர பதாகைகள் வைத்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி பதாகை வைக்க அனுமதி கேட்டபோது, இதே காரணத்தை கூறி காவல் துறை அனுமதி மறுத்தது அதனை ஏற்ற அதிமுகவினர் விளம்பர பதாகை வைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநாட்டிற்கும் வேட்டுவ கவுண்டர்கள் அமைப்பைச் சேர்ந்த புதிய திராவிட கழகத்தினர் விளம்பர பதாகை வைத்திருந்த போது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திருச்செங்கோடு தொகுதிக்கு ஆற்றிய பணிகள் என்கிற பெயரில் ஈஸ்வரன் படமும் தமிழக முதல்வர் படமும் போட்டு விளம்பர பதாகை வைக்கப்பட்டிருந்தது அதனை உடனடியாக அகற்ற வேண்டும் எல்லா கட்சியினரையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும் என அறிவுறுத்தி அதிமுகவினர் புதிய பேருந்து நிலையம் அருகே குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் பேனரை அகற்றி விடுகிறோம் எனக் கூறி காலதாமதம் செய்து வந்தனர். இந்த நிலையில் காலை 7 மணி முதல் காத்திருந்த அஇஅதிமுகவினர் திருச்செங்கோடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக தலைமை பொது குழு உறுப்பினர் பொன் சரஸ்வதி தலைமையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் திருச்செங்கோடு ஈரோடு ரோடு நாமக்கல் ரோடு சங்ககிரி ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியல் குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு ஊரக காவல்துறை ஆய்வாளர் பாரதிமோகன் விரைந்து வந்து பேனரை உடனடியாக அகற்றுவதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட அதிமுக துணை செயலாளர் முருகேசன் நகர செயலாளர் அங்க முத்து நகர துணை செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் ராஜவேல் தொழிற் சங்க செயலாளர் பழ.ராமலிங்கம் அதிமுக மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் பரணிதரன் திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன் தெற்கு ஒன்றிய பிரதிநிதி வெங்கடாசலம் கூட்டுறவாளர் ராமமூர்த்தி வழக்கறிஞர் ஜனார்த்தனன் மற்றும்நகர் மன்ற உறுப்பினர்கள் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் மகளிர் அணியினர் தகவல் தொழில்நுட்ப அணியினர் என சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.