• Sat. Nov 1st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

ஸ்கேட்டிங்கில் பதக்கங்களை வென்ற தமிழக மாணவர்களை பாராட்டிய அமைச்சர் உதயநிதி

BySeenu

Mar 1, 2024

ஸ்கேட்டிங் விளையாட்டில் பதக்கங்களை குவித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார்.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உயரிய ஊக்க தொகையாக ஏழரை இலட்சம் ரூபாய் பெற்று கோவை திரும்பிய ஸ்கேட்டிங் வீர்ர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.. 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவ,மாணவிகளுக்கு ஊக்க தொகை வழங்கப்படுகறது. இந்நிலையில் அண்மையில் சென்னையில் நடைபெற்ற, விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து செயல்பட்ட தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு சுமார் 16 கோடி ரூபாய்  ஊக்கத் தொகையை வழங்கினார்.
இதில் கோவையை சேர்ந்த ஸ்கேட்டிங் வீரர்கள் மூன்று பேருக்கு ஏழரை இலட்சம் ரூபாய் ஊக்க தொகை வழங்கி கவுரவித்தார். இந்நிலையில் கோவை திரும்பிய மாணவர்கள் கவுதம், ஆரவ், தபஸ் பதி ஆகிய மூன்று  மாணவர்களுக்கு பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. 
விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்ற கவுதம், ஆரவ், தபஸ் பதி ஆகியோர் பேசுகையில்,
கடந்த ஐந்து  வருடங்களாக தொடர்ந்து ஸ்கேட்டிங் விளையாட்டில் பதக்கங்கள் குவித்து வருவதாகவும்,  தமிழக அரசு வழங்கிய ஊக்க தொகை தேசிய சர்வதேச அளவில்  இன்னும் சாதிக்க ஊக்கம் அளிப்பதாக தெரிவித்தனர். 
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னால் ஸ்கேட்டிங் விளையாட்டு வீர்ரும் பயிற்சியாளரும் ஆன கனிஷ்கா தரணி குமார் பேசினார். அப்போது பேசிய அவர், 
தமிழக அரசு விளையாட்டு வீர்ர்களை ஊக்குவித்து வருவதாகவும்,  இதற்கு  விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.

தற்போது கோவையை பொறுத்த வரை இன்னும் சறுக்கல் விளையாட்டின் சில பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்க மைதானங்கள் தேவைப்படுவதாக கூறிய அவர், இது போன்ற வசதிகள் இருந்தால் சர்வதேச அளவில் தமிழகத்தில் இருந்து ஸ்கேட்டிங் வீரர்கள் சாதிக்க வாய்ப்புள்ளது என அவர் நம்பிக்கை தெரிவித்தார்..