இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகை தந்துள்ளார்., பல்லடத்தில் நடைபெறும் நிகழ்வை முடித்த பின் மாலை மதுரை வரும் நரேந்திர மோடி மதுரையில் இன்று தங்கி விட்டு நாளை காலை இராமநாதபுரம் செல்கிறார்.,
இந்நிலையில் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்த மத்திய அரசுக்கு எதிராகவும், இன்று மதுரை வரும் பிரதமருக்கு எதிராக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பிரதமர் மோடியை திரும்பி போக சொல்லி கண்டன கோசங்கள் எழுப்பி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.,
பிரதமருக்கு எதிராக கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 விவசாயிகளை டிஎஸ்பி விஜயக்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளனர்.