சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் அந்தோனி பாக்யராஜ் இயக்கி ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளி வந்துள்ள திரைப்படம்”சைரன் 108″. இத்திரைப்படத்தில் யோகிபாபு, அனுபமா, சமுத்திரக்கனி, சச்சு உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் ஜெயம் ரவி தனது நண்பனின் காதலுக்கு துணை போன காரணத்தால் வில்லன்களால் தனது மனைவி கொலை செய்யப்படுகிறார் அது மட்டுமின்றி செய்யாத கொலை குற்றத்திற்கு வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவ விக்கிறார்.
சிறையில் இருந்து 2 வார பரோலில் வெளியில் வருகிறார் ஜெயம் ரவி. அவர் வெளிவந்த நேரம் அவரைச் சுற்றி சில கொலைகள் அரங்கேறுகின்றன. கொலையானவர்களுக்கும், ஜெயம்ரவிக்கும் என்ன தொடர்பு?தனது குடும்பத்தை நிலை குலையச் செய்த வில்லன்களை பழிவாங்குவாரா ஜெயம்ரவி? காவல் துறை அதிகாரியான கீர்த்தி சுரேஷ் இந்த கொலைக்கான காரணத்தையும், கொலையாளியையும் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே சைரன்108 திரைப்படத்தின் கதை.

ஜெயம் ரவி தனது நடிப்பால் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்துள்ளர். தனது மகளை 14 வருடம் பிரிந்து மகளை மறைந்திருந்து பார்க்க துடிக்கும் இடங்களில் நம்மை கண் கலங்கச் செய்துள்ளார்.
வில்லன்களைப் பழிவாங்கும் இடங்களில் தனது நடிப்பால் மிரட்டியுள்ளார். காவல்துறை அதிகாரியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நன்றாக நடித்துள்ளார். யோகிபாபு வரும் காட்சிகள் பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளது.
அனுபமா, சமுத்திரக்கனி, சச்சு போன்றோர்கள் தனது காதாபாத்திரத்திற்கேற்றார் போல சிறப்பாக நடித்துள்ளனர். கதையை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தியுள்ளார் இயக்குனர் அந்தோணி பாக்கியராஜ். செல்வகுமாரின் கேமரா கண்களும் ஜிவி பிரகாஷின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.
மொத்தத்தில் “சைரன்108” வேகமாக ஒலித்துள்ளது.
