• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அபுதாபியில் பாரத் மார்ட் வணிக மையம் தொடக்கம்

Byவிஷா

Feb 15, 2024

வளைகுடா நாடான அபுதாபியில் பாரத் மார்ட் வணிக மையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்துள்ளார். இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களது பல்வேறு வகையான தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்த இது ஓர் ஒருங்கிணைந்த வர்த்தக தளமாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளுடன் பெட்ரோலிய பொருட்களுக்கு அப்பாலும் வணிக உறவினை இந்தியா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாரத் மார்ட் என்னும் புதுமையான வணிக மையத்தை துபாயில் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இதில் ஐக்கிய அரபு எமிரேட்சின் துணை அதிபர் மற்றும் பிரதமரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கலந்துகொண்டார். இதற்கான பணிகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.
இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களது பல்வேறு வகையான தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்த இது ஓர் ஒருங்கிணைந்த வர்த்தக தளமாக செயல்படும். சுமார் 1 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டிருக்கும் இந்த பாரத் மார்ட், கிடங்கு, சில்லறை விற்பனை மற்றும் விருந்தோம்பல் வசதிகளை ஒருங்கே கொண்டிருக்கும். கனரக இயந்திரங்கள் முதல் அன்றாட தேவைக்கான எளிய பொருட்கள் வரை சகலமானதையும் இங்கே பெறலாம்.