• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இரவோடு இரவாக சிறையில் அடைக்கப்பட்ட MyV3 Ads உரிமையாளர் சக்தி ஆனந்த்…

BySeenu

Feb 11, 2024

MyV3 Ads மீது சில நபர்கள் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் உட்பட 150 க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து காவல் ஆணையாளரை பார்த்து விட்டு தான் செல்வோம் என ஆணையாளர் அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

அதனைத் தொடர்ந்து சக்தி ஆனந்த் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து சக்தி ஆனந்த் இரவோடு இரவாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.