• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழ் திரைப்படங்களில் குறைந்த நிமிடங்களேபோதைப்பொருள் விழிப்புணர்வு காட்சிகள் வருவது வேதனை அளிக்கிறதுகோவை காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேச்சு

BySeenu

Feb 7, 2024

தமிழ் திரைப்படங்களில் இரண்டே கால் மணி நேர படக்காட்சியில் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு காட்சிகள் வருவது வேதனைக்குரியது என கோவை காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்,
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு இன்ஜினியரிங் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக டிஜிட்டல் வடிவிலான போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஈர்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது ஒன்றை லட்சம் மாணவர்கள் இந்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்டது வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் அமைப்பு மூலம் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இதனை பார் கல்விக் குழுமங்கள் தலைவர் சுந்தர்ராஜன் தலைமை செயல் அதிகாரி அனுசரவி கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு பாலகிருஷ்ணன் ஆகியோர் இந்த சான்றிதழை பெற்றுக் கொண்டனர் இதனை வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதி கிறிஸ்டோபர் டைலர் கிராஃப்ட் என்பவர் வழங்கினார்.
பின்னர் இந்த விழாவில் பேசிய கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன்..,
கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக தேர்வு செய்யப்பட்டு பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டனர் இவர்கள் மாணவர்களிடையே போதை பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு போதைப்பொருள் உள்ளன என்பதை கண்காணிப்பார்கள் எனவும் தலைமை என்பது மிக முக்கியமானது. தலைமை என்பது அனைவருக்கும் தேவைப்படக்கூடிய ஒன்று சில திரைப்படங்களில் தவறான வழிகாட்டுதல்களை போதிக்கின்றனர். இரண்டு கால் மணி நேரத்தில் பெரும் 15 நிமிடங்கள் மட்டுமே போதைப்பொருள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகின்றனர் போதைப்பொருட்களை கோவை மாணவர்களுக்குள் வராமல் தடுக்க மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகாமல் உறுதியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார