• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் பெரியரத வீதி திடீரென இரு புறமும் அடைத்து ஒரு வழி பாதையாக மாற்றியதால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

ByKalamegam Viswanathan

Jan 30, 2024

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் பெரிய ரத வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை திடீரென இருபுறமும் போக்குவரத்து துறை சார்பில் எந்த ஒரு வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என முன்னறிவிப்பின்றி பாதை அடைக்கப்பட்டது.

இதனால் கோவில் சுற்றி உள்ள உள்ளூர் மக்கள் மற்றும் கடை வியாபாரிகள் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாத சூழ்நிலையும் இதனால் இரண்டு கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டதால் குப்பை அகற்றி விட்டு மீண்டும் தாங்கள் கோயில் வழியாக செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று துறையினரிடம் முறையிட்டனர். அதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவிக்கவே உள்ளூர் மக்கள் திமுகவினர் அதிமுகவினர் என அனைத்து கட்சி நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தனியாக அழைத்து பேச்சுவார்த்தை மேலும் தற்காலிகமாக தடுப்புகளை அகற்றுவதாகவும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வைதி கூட்டம் நடத்தப்பட்ட பிறகு நிர்ந்தர தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து அமைதியாக கலந்து சென்றனர்.