• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு – காவல் துறை சார்பில் மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

ByP.Thangapandi

Jan 30, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரக காவல்த்துறை மற்றும் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

உசிலம்பட்டி தேவர் சிலையில் துவங்கிய இந்த பேரணியை உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு, உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் சுகந்தி உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

தலைக்கவசம் அணிய வேண்டும், சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பதாதைகளை ஏந்தி மாணவ, மாணவிகள் நடத்திய பேரணி உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் நிறைவுற்றது.

தொடர்ந்து ஆட்டோ ஒட்டுநர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு, உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் சுகந்தி இணைந்து வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.