• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் திமுக வட்ட செயலாளர் படுகொலை.., போலீசார் தீவிர விசாரணை…

ByKalamegam Viswanathan

Jan 28, 2024

மதுரை எம். கே. புரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் 78 வது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திமுகவில் பதவி வழங்கியது சக உறவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்று இரவு வழக்கம் போல் தனது வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது, திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய மர்ம கும்பல் திருமுருகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து அவரின் உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி இருக்கின்றனர். இதனால் சம்பவ இடத்திலேயே திருமுருகன் துடி, துடித்து உயிரிழந்திருக்கிறார். உடனடியாக சம்பவம் அறிந்து விரைந்து வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? உறவினர்களா அல்லது அரசியல் முன்விரோதம் ஏதேனும் இவருக்கு உள்ளதா போன்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.