• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நில அளவை விவரங்களை தெரிந்து கொள்ள புதிய செயலி அறிமுகம்..!

Byவிஷா

Jan 24, 2024

தமிழகத்தில் இனி எங்கு வேண்டுமானாலும், நில அளவை விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக புதிய செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரி திட்டத்துறை மூலமாக இணையதளம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பட்டா மாறுதல் தமிழ் நிலம் கைபேசி செயலி இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணைய வழி சேவை தமிழ் நிலம் இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
உட்பிரிவு மற்றும் உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கையை உடனுக்குடன் செயல்படுத்துவதற்கு தமிழ் நிலம் ஊரகம் மற்றும் தமிழ் நிலம் நகரம் ஆகியவற்றுக்கு கணினி சேவை உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இணையதளம் மற்றும் தமிழ் நிலம் செயலி மூலம் நில அளவைகள் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.