• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி..!

Byவிஷா

Jan 19, 2024

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வரும் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை 4 நாட்கள் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோவிலாகும். இங்கே உள்ள மலைக்கோவிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகிய இரண்டு சுயம்பு லிங்கங்கள் உள்ளன. மூலிகைகள் நிறைந்த மலைக்குன்று ஒன்றும் உள்ளது. அதற்கு சஞ்சீவி மலை என்று பெயர். மேலும் சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்களுக்கும் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மொத்தம் 8 நாட்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
அதன்படி, தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வரும் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை 4 நாட்கள் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்லும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையோ, பிளாஸ்டிக் பொருட்களையோ கொண்டு செல்லக்கூடாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.