• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 21 ஆவது பட்டமளிப்பு விழா..!

BySeenu

Jan 7, 2024

கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 21 ஆவது பட்டமளிப்பு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமாகிய எஸ்.மலர்விழி தலைமை தாங்கிய பட்டமளிப்பு விழாவில் கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் கே.ஆதித்யா துவக்கி வைத்தார். இதில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர் முனைவர் கே.சுந்தரராமன் அவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டார்.தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜே.ஜேனட் அனைவரையும் வரவேற்று கல்லூரியின் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். கல்வி உள்கட்டமைப்பு சமூக மற்றும் ஆராய்ச்சி மதிப்பீடுகளின் அடிப்படையில் இக்கல்லூரி உலகளவிலும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் பெற்ற உயர் தரவரிசைகளையும். விருதுகளையும் பேராசிரியர்களின் சாதனைகளையும் பட்டியலிட்டார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக டாடா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனத்தின் பிராந்தியத் தலைவர் கணேஷ் திருநாவுக்கரசு கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கல்வியில் மிகச்சிறந்து விளங்கிய உயர் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் வாழ்த்துப் பெற்றனர். இவ்விழாவில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் டீன்கள் பல்வேறு துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.