• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சென்னையில் 47வது புத்தகக் கண்காட்சி தொடக்கம்..!

Byவிஷா

Jan 2, 2024

சென்னையில் நாளை (ஜனவரி 3) முதல் ஜனவரி 21 வரை 47வது புத்தகக் கண்காடசி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடப்பு ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி ஜனவரி 3ஆம் தேதி நாளை தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நாளை மாலை 4.30 மணி அளவில் 47 ஆவது சென்னை புத்தகக் காட்சி 2024 தொடங்குகிறது. இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொள்கிறார்.
ஜனவரி 21ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ள இந்த புத்தகக் காட்சியில் சுமார் 1000 மரங்குகள் நடைபெறும் எனவும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தகக் காட்சியை பார்வையிட பத்து ரூபாய் நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.