• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஒன்றிய அரசு தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிதி வழங்காமல் வஞ்சித்து வருகிறது. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா எம்எல்ஏ பேட்டி

ByKalamegam Viswanathan

Dec 25, 2023

2004 சுனாமிக்கு பின் தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைந்தது என தெரியாமல் நிர்மலாசித்தாரம்மன் கூறுகிறார். ஒன்றிய அரசு தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிதி வழங்காமல் வஞ்சித்து வருகிறது. மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜ்மல் கான் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹர்லால் எம்எல்ஏ செய்தியாளர் சந்திப்பு.

தமிழ்நாட்டில் டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னை காஞ்சிபுரம் மிகப்பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நூறாண்டு காலம் காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் பெய்யாத அளவிற்கு ஏறத்தாழ 90 சென்டிமீட்டர் அளவிற்கு ஒரு சில நாட்களிலேயே மழை பெய்துள்ளது.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாகவும், அதேபோல மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகவும் மக்களை மீட்கக்கூடிய பணியில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் பணிகளிலும் எங்களுடைய துணைத் தலைவர் பிஎஸ் ஹமீது தலைமை நிர்வாக உறுப்பினர் ஜோசப் தலைமையில் பல்வேறு மீட்பு குழுவினர் நிவாரண பணியாளர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.

அவர்கள் தரக்கூடிய தகவல்களை பார்க்கும் பொழுது இது ஒரு மிக மோசமான பேரிடராக அமைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பாக இந்த பேரிடரை நேஷனல் ஹலாமிக் ஆப் அரெஸ்ட் என மிக அரிதாக நிகழக்கூடிய கூடிய பேரிடராக இதை அறிவிக்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய ஒன்றியத்தின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்த தமிழ்நாட்டில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பேரிடரை தேசிய பேரிடர் என்று அறிவிக்க முடியாது என்று இதற்கு முன்பாக இந்தியாவில் எந்த பேரிடரும் தேசிய பேரிடராக அல்லது மிக மோசமாக பேரிடராக அறிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

2004இல் சுனாமி தாக்குதல் பொழுதும் கூட அது தேசிய பேரிடர் இல்லை என்று அறிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு வஞ்சகம் செய்கிறார். ஒன்றிய பாஜக அரசிற்கு தமிழ்நாட்டின் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறை இல்லை என்று எடுத்துக்காட்டும் வகையில் தான் நிர்மலா சீதாராமனின் பேச்சுகள் அமைந்துள்ளது.

காரணம் என்னவென்றால் 2904 சுனாமிக்கு பிறகு தான் 2005 நேஷனல் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் அதாவது தேசிய பேரிடர் மேலாண்மை குழு உருவாக்கப்பட்டு அதற்காக ஒரு அதிகாரக் குழுவும் அமைக்கப்பட்டது. அதற்கு பிறகுதான் ஒரு மாநிலத்தில் ஏற்படக்கூடிய ஒரு நிகழ்வு ஒரு இயற்கை பேரழிவு அதன் தன்மையை பொறுத்து அதற்கான தேசிய பேரிடர் கான அதன் தன்மையை பொறுத்து ஒன்றிய அரசு அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பேரிடர்களை எல்லாம் தேசிய பேரிடர்களாக அறிக்கை மட்டும் என்று அவர்கள் சொல்லக்கூடியது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்ன காரணம் என்றால் 2013ல் உத்தரங்கள் மாநிலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் மிகத் தெளிவாக அதாவது மிக மோசமான இயற்கை பேரழிவு என்று அறிவிக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் 2014இல் என்று பேரிடப்பட்ட குட் கூத் என்று சொல்லக்கூடிய ஒரு பெரிய புயல் ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் மிகப்பெரிய அழிவு ஏற்பட்ட பொழுது அதுவும் தேசிய பேரிடராக மிக மோசமான பேரிடராக அறிவிக்கப்பட்டது. .எனவே தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடர் மிக மோசமான பேரிடர் என்று குறிப்பிட ஒன்றிய அரசுக்கு மனமில்லை.

அவர்கள் தரக்கூடிய தருவதாக கூறிய நிதி கூட வழக்கமாக வரக்கூடிய ஒரு நிதிதான் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவில இருக்கக்கூடிய மாநிலங்களிலேயே இந்திய அரசுக்குநாம் செலுத்தக்கூடிய வரி மூன்று மாநிலங்களில் ஒன்றாக பெரிய அளவிற்கு வரியே செலுத்துகின்றோம்.

ஆனால் அதற்கு பதிலாக ஒன்றிய அரசுக்கு பதிலாக நமக்கு தரக்கூடிய வரிநிதி மிக மிக குறைவாக ஒரு ரூபாய் செலுத்திகிறோம் என்றால் வெறும் 26 பைசா தான் நமக்கு திரும்ப வருகின்றது தமிழ்நாட்டில் எவ்வளவு பெரிய துயரங்கள் ஏற்பட்ட பொழுதிலும் தமிழ்நாடு அரசு கேட்டுள்ள நிதியை தர மறுக்கின்ற பாஜக அரசும் மோடியின் தலைமையிலான அரசும் தர மறுக்கின்றனர்.

தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர்களுக்கு தமிழக அரசு கேட்கக்கூடிய நிதியை கொடுக்க கொடுக்க முடியாததும் அவர்கள் தமிழக மக்களின் மேல் அக்கறை இல்லாததையும் காட்டுகின்றது அவர்கள் அக்கறைப்பட வேண்டும் தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்ககூடக்ஷடிய இந்த பெருந்துயரில் இருந்து அவர்களை மீட்க தமிழக அரசே கேட்கக்கூடிய நிதியை கொடுக்க வேண்டும்.

எல்லாம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் பொருட்கள் இல்லை பொருட்கள் எல்லாம் போய்விட்டது வீடுகளில் சமைப்பதற்கு பாத்திரங்கள் இல்லை இப்படி பல பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு கேட்கக்கூடிய நிதியை ஒன்றிய அரசு வழங்கி தமிழ்நாடு மக்கள் மீது நாம் அக்கறை கொண்டுள்ளோம் என்பதை நிரூபிக்க வேண்டும். ஜிஎஸ்டி வரிகள் அதிலும் பாரபட்சமாக தான் உள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் ஒன்பதாயிரம் கோடியும் தமிழ்நாட்டிற்கு 2600 கோடி தான் கொடுத்துள்ளார்கள் எல்லா விஷயத்திலும் ஜிஎஸ்டி முறையில் தமிழ்நாடு தான் முதலிடம் வகிக்கிறது என்ற கேள்விக்கு,

அதாவது அதை தான் நான் குறிப்பிட்டுள்ளேன் தமிழ்நாட்டில் நாம் ஒரு ரூபாய் மரியாதை செலுத்துகின்றோம். நமக்கு வருவது 26 பைசா தான் ஆனால் உத்தர பிரதேசம் ஒரு ரூபாய் செலுத்தினால் அவர்கள் சுமார் மூன்று ரூபாய் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பெறுகின்றனர். எனவே இது ஒரு பாரபட்சமான போக்கு மோடி ஆட்சியில் மிக மோசமான பாரபட்சமாக உள்ளது. அதில் தமிழ்நாடு மிகவும் மோசமாக உள்ளது என கூறினார்.