• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மான்போர்ட் சிபிஎஸ்சி பள்ளியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட கிறிஸ்மஸ் பெருவிழா..,

ByG.Suresh

Dec 22, 2023

சிவகங்கை மாவட்டம் சுந்தர் நடப்பில் அமைந்துள்ள மான்போர்ட் சிபிஎஸ்சி பள்ளியில் பள்ளியின் 25வது ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு பள்ளியின் முதல்வர் இக்னேஷியஸ்தாஸ் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகளின் நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிவகங்கை மறைமாவட்ட ஆயர் முனைவர் லூர்து ஆனந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மீண்டும் சென்னை மற்றும் நெல்லை தூத்துக்குடி ஆகிய இடங்களில் நடைபெற்ற வெள்ளபெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவன் அனைத்து வளங்களையும் அளிக்க வேண்டும் என்றும், இது போன்ற துயரங்கள் இனி நடைபெற வேண்டாம் என்றும் கூட்டுப் பிரார்த்தனையும் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருச்சி மண்டல தலைவர் அருட் சகோதரர் இருதயம் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.