• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு..!

ByNamakkal Anjaneyar

Dec 22, 2023
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி சார்பில், தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு வழங்க  ரூ 10 லட்சம் மதிப்புள்ள அரிசி பருப்பு, சர்க்கரை உப்பு உள்ளிட்ட பொருள்கள் கோவில்பட்டி நகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆணையாளர் சேகர் பொறியாளர் சரவணன் நகர் மன்ற உறுப்பினர்கள் அனுப்பி வைத்தனர். கடந்த தினங்களுக்கு முன் தென் மாவட்டங்களில் பெய்த கன மழையால் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து தவிக்கும் பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் வகையில், திருச்செங்கோடு நகராட்சி சார்பில் ஐந்து டன் அரிசி ஒரு டன் சக்கரை ஒரு டன் பருப்பு ஒரு டன் உப்பு என சுமார் பத்து லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் வாகனம் மூலம் கோவில்பட்டி நகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆணையாளர் சேகர் பொறியாளர் சரவணன் தூய்மை அலுவலர் வெங்கடாசலம் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுஆயிரம் பைகளில் பொருட்களை கோவில்பட்டி நகராட்சிக்கு வேன் மூலம் அனுப்பி வைத்தனர்.