• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை.., தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை…

Byகுமார்

Dec 17, 2023

மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருந்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.குறிப்பாக ஆன்லைன் இன்டர்நெட் மருந்து வணிகத்திற்கு உரிமம் வழங்கப்படாத போது சட்டத்தை மதிக்காமல் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் முழுவதும் வரிவிலக்கு அளித்திட வேண்டும்.உரிய மருந்து விற்பனை உரிமங்கள் இன்றி ஆன்லைன் வணிக செயலிகள் மூலம் விளம்பரம் செய்பவரை மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒரே மருந்து ஒரே விலை என்ற நிலை இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் முறையினை மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் உடனடியாக உறுதி செய்ய வேண்டும். தேவைக்கு மேல் சில்லறை மருந்துகள் விற்பனை உரிமங்கள் வழங்கப்படுவது கட்டுப்படுத்த வேண்டும் மக்கள் தொகை அடிப்படையிலோ அல்லது ரேஷன் கார்டு அடிப்படையிலோ உரிமங்கள் வழங்கப்பட வேண்டும். மருந்து வணிகர்களுக்கு மின் கட்டணத்தை வீட்டு உபயோக மின் கட்டண விலைக்கு தர வேண்டும். உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்கத்தினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.