• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஆயுதப்படை கவாத்து காவலர்களின் அணிவகுப்பை, காவல்துறை தலைவர் என்.கண்ணன் பார்வையிட்டு ஆய்வு…

ByB.MATHIYALAGAN

Dec 16, 2023

கடலூர் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் வடக்கு மண்டல காவல்துறை ஆயுதப்படை காவலர்களின் தலைவர் N.கண்ணன் IPS , கடலூர் மாவட்ட ஆயுதப்படை கவாத்து காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் போது ஆயுதப்படை காவலர்களின் பணி முக்கியமானதாகும். அத்தகைய பணியை மேற்கொள்வதற்கு கவாத்து மிகவும் அவசியமானதாகும். கூட்டாக இணைந்து (Team work) பணியாற்றியக்கூடிய
ஆயுதப்படை காவலர்கள் தோழமை உணர்வுடன் கண்டிப்பாக இருக்க வேண்டும். தோழமை உணர்வுடன் இருக்க கவாத்து மிகவும் இன்றியமையாததாகும்.
உங்களது உடலையும், மனதையும் பேணிகாக்க விருப்பத்துடன் கவாத்தில் பங்கேற்க வேண்டும் என ஆயுதப்படை காவலர்களிடம் பேசினார். பின்னர் காவல்துறை வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சௌந்திரராஜன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அருட்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.