• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குச்சனூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்.., பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவசமாக டிராக்டர் வழங்கியவருக்கு பாராட்டு விழா…

ByPandikumar

Dec 14, 2023

தேனி மாவட்டம் குச்சனூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவசமாக டிராக்டர் வழங்கியவருக்கு பாராட்டு விழாவை நடத்தினார்கள்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சி அமைந்துள்ளது.
தமிழகத்தில் மிகச்சிறந்த ஆன்மீக தலமாக சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த பேரூராட்சியில் வசிக்கும் பொது மக்களின் சுகாதார பயன்பாட்டிற்காக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலமாக சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் பொதுமக்களின் நலன் கருதி பயன்பாட்டிற்காகவும் இலவசமாக டிராக்டர் ஒன்றினை அதே ஊரைச் சேர்ந்த வீரமணி என்பவர் இலவசமாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு வழங்கினார்.

பொதுமக்களின் சுகாதார பயன்பாட்டிற்காக டிராக்டரை இலவசமாக வழங்கியதுடன் பொது மக்களின் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டவரைப் பாராட்டும் விதமாக அவருக்கு பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழாவினை நடத்தினார்கள்.

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ தங்கதமிழ்ச்செல்வன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ சரவணக்குமார், பேரூராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கி சுகாதாரப் பணிகளை பாதுகாக்க உதவியவரை பாராட்டி சிறப்புரையாற்றினார்கள்.