• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.72 இலட்சம்..!

Byவிஷா

Dec 8, 2023

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.72 லட்சத்தை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டம்
மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்கள் நேர்த்தி கடனாக உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர்.
அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கோயில் நிர்வாகம் சார்பில் மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி கோயில் இணை ஆணையர் முன்னிலையில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதில் ரூ. 72 லட்சத்து 75 ஆயிரத்து 692 ரூபாய் ரொக்கமும், 1.788 கிலோ தங்கமும், 2.481 கிலோ வெள்ளியும், 188 அயல்நாட்டு நோட்டுகளும், 692 அயல்நாட்டு நாணயங்களும் காணிக்கையாக கிடைத்தன.