தமிழ்நாடு, பாண்டிசேரி விஸ்வகர்மா சமுதாக கூட்டமைப்பு மற்றும் விஸ்வபாரத் மக்கள் கட்சியினர் தச்சு வேலை, பாத்திர வேலை, சிற்பம், தங்க நகை வேலை செய்வோர்க்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், தமிழகத்தில் பாரம்பரிய தொழில் செய்து வரும் தச்சு வேலை இரும்பு வேலை பாத்திர வேலை சிற்ப வேலை தங்க நகை வேலை செய்யும் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் தொழில்நுட்பம் அடைந்து துன்பப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், எனவே நகரின் புறநகர் பகுதி இருக்கட்டும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் இடத்துடன் கூடிய வீடு விஸ்வகர்மா காலனி என்ற பெயரில் எங்களுக்கு விஸ்வகர்மா பெண்கள் பெயரில் தாங்களே செய்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், பாரம்பரிய ஐந்தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் தர வேண்டும் எனவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஐந்தில் மூன்று சதவிகித இட ஒதுக்கீடு தருவதற்கு தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர் மேலும் இந்த நிகழ்வில், எஸ்.எம் கமலஹாசன், ஜ.எஸ் மணி, எம்.நடராஜன், ஆர்.நாச்சிமுத்து, எஸ்.குழந்தைவேலு, ஆர்.வரதராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.